கதை ஒன்னு சொல்வேன்
பொ(ய்)யிலை அதில்..
கட்டையான குறுங்கதை தான்..
வேலி தாண்டிய வெள்ளாடு
ஏழு அதை எட்டாக்கி,
கொட்டகைக்கு போன கதை...
நல்லாடு நாற்காளிக்கு
மன்றாடுதா? இல்லை
தள்ளாடுதா?.. அறிந்திட
ஊரார் காத்திருக்க..
'ஏழு' சுவரங்களில் இசைப்
பாடிய கூட்டம்,எட்டாக்
கனியை எட்டிவிட்டதாய்
'எட்டு' திசைக்கும் ஏடெழுத..
வானவில்லின் வண்ணங்கள்
ஏழில் ஒன்னு போனதால்
எழில் இன்னும் போகலே
என்று தலையும் செயலும்
ஊராருக்கு உரைத்திட...
கூப்பாடு இல்லா கூட்டமதில்,
கேள்வி கேட்பாரின்றி,தம்
நாட்டமதை நிலைநாட்டி
கொடியை நாட்டியோர்
இன்னிசை பாடிட..
எம்மை புறந்தள்ளி
அறமின்றி கோலோச்ச
முயற்சிப்போர்,இகழ்ச்சிக்கு
உரியவரே என்று ஏழிசையில்
ஆறானவர்கள் பண்ணிசைக்க..
கதைக்கான முடிவுரையை
வாரியம் எழுதிடுமா?
வாக்களித்தோரின் வீரிய
குரலால் பொதுக்குழு தான்
கூடிடுமா? என்று ஜமாத்தார்கள்
அவாவுடன் பதைபதைக்க
காத்திருக்கின்றனர்...
துவாவுடன்,
அவராத்தர் சிராஜ்...
Thursday, 2 May 2024
கதை ஒன்னு சொல்வேன் .
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment