Monday, 19 July 2021

தியாகம் செய்திடுவோமே.!

இறை ஆணையை ஏற்று,
இறையோனைப் போற்றி
தன்மகனைத் தானமாய்
தரத்துணிந்த தந்தை..

அத்தியாகத்தை போற்றிடும்
இந்நன்னாளில்,நாமும் சில
தியாகங்களை செய்திட
மனதில் உறுதியேற்போம்..

கோபத்தையும்,பிறர் மேல்
சாற்றிடும் சாபத்தையும்,போட்டிப்
பொறாமை,பொச்செரிப்பையும் 
அதனால் நம் நெஞ்சத்தில்
எழும்  நச்சரிப்பையும்..

பொய்ப்பேசி,புறம்பேசி,
தற்பெருமை கொண்டு,
சுயம்பேசி திரிவதையும்..
எப்பொழுதும் கைப்பேசி
என்றலையும் போக்கினையும்..  

சூதும்,வாதும்,வஞ்சனையும்
நம் நெஞ்சினை எரிக்கும்,
திருட்டும்,புரட்டும், நல்லவரை
நம்மிடம் இருந்து விரட்டும்
என்பதையும் உணர்ந்து.. 

மேற்சொன்ன கேடுதரும்
பேய்க்குணங்களை,தியாகம்
செய்திட ,மனதார முனைவோமே..
தீக்குணங்கள் போனாலே

நற்குணங்கள் நாடிவரும்..
வல்லவனின் அருள்மாரியும்
நம்மை தேடிவரும்...
உறவுகளுக்கும்,
நட்புக்களுக்கும்
தியாகத் திருநாள்
நல்வாழ்த்துக்கள்

No comments:

Post a Comment