Thursday, 11 February 2021

உன்னருகில் இருப்பவர் சிலர்

 

உன்னருகில் இருப்பவர் சிலருக்கு
சில பல சமயங்களில் ,உன்னை
யாரென்றும் அறிவதில்லை,உன்
ஆழ்மனதும் புரிவதில்லை...

அவர் பார்க்கும் கோணத்தில்
இருந்தே,உன்னை பற்றிய
பிம்பம் நிர்ணயிக்கப்படுகிறது..
சிலருக்கு தாயகிறாய்,இன்னும்
சிலருக்கு கொடும் பேயாகிறாய்..

கோணப்பார்வை பார்த்து,
தவறாய் கணித்தவரை விட்டு,சிறிது
தூரம் போனால், தூரப்பார்வையில்,
நம் பரிமாணம் புரியுமோ என்னவோ?

இறைவனின் ஆட்சிக்கு உட்பட்டு
மனதின் சாட்சிக்கு ஆட்பட்டு
சரியான பாதையில் நீ நடந்தால்
ஊரென்ன சொன்னாலும்
உனக்கென்ன ஆகிவிடும்...

அடிபட்டு மிதிபட்டு,நாம் கற்கும்
பாடங்களே,நற்குணங்களாய்
நிலைபெற்று,நம்மை சீர்படுத்தி
செம்மையாக்கிடும் இவ்வுலகிலே.

No comments:

Post a Comment