சாலப்பை தாவூத் அண்ணன் அவர்களின் குடும்பத்தினருக்கு
எனது ஆழ்ந்த இரங்கல்...
~~~~~~~~
புத்தகம் விற்ற பொது அறிவு
பெட்டகமே,நூல்கள் நிறைந்த
சன்மார்க்க சபையின்,நூலகம் அருகில்,
உனது வானக பயணத்தை தொடங்கிவிட்டாய்..
அரபுலகின் மகாகவி
முத்தநபி அல் கிண்டியின்
கவிதையின் பால் நீ கொண்ட காதலால்,
அவன் பெயரில்
தொழில் கண்ட நன்முத்து நீ..
எட்டுப்பட்டை,சயிரத்தர் அப்பாக்கள்
தீட்டிய கோகினூர் வைரமே..
உன்னால் வாழ்ந்தவர்கள்
பலர் வீழ்ந்தவர்கள் யாரும் இலர்..
வானூர்தியில் உலகெங்கும்
தொழிலுக்காக நீ சென்ற போதும்
இறுதியாய் அமரர் ஊர்தியில்
வந்த போதும்,எளிமை.. எளிமை
அதுதானே உன் வலிமை..
பலர் தொழ மேல்கொண்டாழியில்
பள்ளி,படிக்க பாய்க்கார தெருவில்
பள்ளி என வகையாய் செய்தாய்..
ஏழை எளியோருக்கு எல்லாம்
மிகையாய் செய்தாய்..
சொல்லிச்செய்யும் இடைக்கால
வள்ளல் அல்ல நீ..ஊருலகம்
அறியாது,நீ அள்ளி செய்ததை
ஈருலக ரட்சகன் அறிவான்...
பதிப்புலகின் ஜாம்பவான்கள்
உன் மதிப்பறிந்து மரியாதை
செய்தது உன் நேர்மைக்கு தானே..
வயோதிகத்தால் சுணங்கினாலும்
வழிபாடுகளில் சுணங்காத
புண்ணியவான் நீ.மண்ணறையில்
உன்னறையை அல்லாஹ்
விசாலமாக்கிடுவானாக...
எல்லாம் வல்ல இறைவா..இந்த
புனித ஆத்மாவை ஏற்று
சுவனத்தில் நற்பதவியை
இவருக்கு தந்தருள்வாயாக...
No comments:
Post a Comment