ஹாஜி என்றொரு நண்பன்
பாஷைகளும்,புற ஓசைகளும்
அவன் செவியை எட்டியதில்லை..
கெடுமதி கொண்டோரின்
புண் மொழியால்,மாசுப்பட்ட
ஒலி அலைகளை,நன்மதி
கொண்டோர் கேட்பதில்லை..
ஹாஜியும் அதை கேட்பதில்லை..
இழிச் சொல்லால் வசைப்பாடி
நட்புக்களையும்,உறவுகளையும்
உதிரச் செய்யும் பழிச்செயலை
மேன்மக்கள் செய்வதில்லை..
ஹாஜியும் அதை செய்வதில்லை..
அளவிலா பேச்சால் தீமைகளே
விளைகின்ற இவ்வுலகில்,இந்த
இளவல்,உயரங்களை தொட
வார்த்தைகளை நம்புவதில்லை
உழைப்பையே நம்புகிறான்..
'நா'த்திறனும்,செவித்திறனும்
இல்லை என்றால் என்ன?அது
குறையும் இல்லை,தடையும்
இல்லை என்பதை உணர்த்தி
பேரெழுச்சியோடு பெயர்
எடுப்பான் நம்ம ஹாஜி...
No comments:
Post a Comment