டெல்லி தர்பார் மீட்டிட
ஒலி எழுப்பும் வீணையாய்
எடப்பாடி...சுயமாய் சுரம்
பாடச் சொன்னால்,பாவம்
அவர் என்ன செய்திடுவார்??
கொத்தடிமைகளை மீட்டிட
சட்டமொன்று உண்டாமே?
மந்திரிகளாய் தமிழகத்தில்
பவனி வரும் `பிஜெபி`
அடிமைகளை,மீட்டிட
தான் வழியுண்டோ ?
இலவசத்தால் ஏமாந்து
பரவசத்தால் வோட்டை
போட்டோம்:அவர்களோ
தமிழகமே தன்வசம் என்று
கூரை ஓட்டை பிரித்து
சூறையாடுகிறார்கள்..
அம்மாவின் பிள்ளைகள்
(ஆட்சியென்ற)காற்றுள்ள
போதே,தூற்றிக்கொள்ள
துடிக்கின்றார்கள்..மக்கள்
தான் தவிக்கின்றார்கள்..
காற்றின் திசை மாற்ற
தருணத்தை எதிர்நோக்கி
தமிழகமே விழித்திருக்கு..
பொற்காலம் வரும் என்று
ஆவலாய் காத்திருக்கு...
No comments:
Post a Comment