Monday, 13 June 2016

அகல் விளக்கை போல சிரிப்பு



அறுபதுகளில் பிறந்தோம் ....இது
எங்களின் இருபதுகளில் எடுத்த நகல் (படம்) 
அகல் விளக்கை போல சிரித்து மகிழ்ந்து
சுற்றி திரிந்த கனா காலம் அது...!!

கடந்த காலம்,எதிர் காலம் 
இருப்பதை மறந்தோம் அன்று ...
நிகழ் காலம் ஒன்றே பிரதானம் என்று 
சுற்றி திரிந்த கனா காலம் அது ..!!


கால்பந்தாட்ட வீரர்களாய்!கைபந்து கழகத்தின்
நண்பர்களாய்! ஊருக்கு உழைபவர்களாய்
பல சமயம் வீட்டையும் மறந்தவர்களாய்
சுற்றி திரிந்த கனா காலம் அது..!!

காலத்தின் கோலமாய் பொருள் தேடும்
படலமாய்,சடலமாய் 
சங்கடமாய் பிரிந்தோம் 
சுற்றி திரிந்த கனா காலத்தை துறந்தோம்
திருமணத்தில் பற்றி பிடிதவளுக்காக!!!

நகலை (படம்) கண்ட நீங்கள் எங்கள் அசலை
காண வேண்டாமா??

ஓட்ட பந்தயத்தில் வெற்றி பெற்ற குதிரையின்
நுரை போல, வாழ்க்கை பந்தயத்தில்
மனைவி மக்களுக்காக ஓடி
பெற்ற வெற்றிக்கு காலம் தந்த
பரிசாய் ..வெள்ளி கம்பிகள்
கிரீடமாய் எங்கள் தலையில் இப்போது ...

இதுவும் ஒரு சுகமான சுமை தான்
புகை படத்தில் உள்ள என் நண்பர்களுக்கா

No comments:

Post a Comment