Friday, 6 November 2015

அப்துல் கலாமே


விண்ணை பிளந்து ஏவுகணை கொண்டு வானம் தொட்டவனே !ஆகாயத்தை அளந்தவனே!! ராமேஸ்வரத்தில் பிறந்த நீ, மேகாலயாவில் வேகமாய் எங்களை எல்லாம் சோகமாய் தவிக்க விட்டு சென்றதேன் ??இன்று மண்ணை பிளந்து மண்ணறையை உன்னறையாய் கொண்டு அகழ்வாராய்ச்சி செய்ய சென்று விட்டாயா??அறிவியலையே காதலித்து திருமணமே வேண்டாம் என்றவனே, நீ விஞ்ஞானியில் ஒரு மெய்ஞானி தான் !! பிறப்பு ஒரு சம்பவமே!!ஆனால் இறப்பு சரித்திரமாக இருக்கவேண்டும்என்று பள்ளி பிள்ளைகளின் வழிகாட்டியாய் ஒளி காட்டியவனே!!கனவு என்பது தூங்கும்போது வருவதல்லஉன்னை தூங்காமல் ஆக்குவது என்று எங்களை தூண்டியவனே!!ராக்கெட்டை செலுத்தி பூலோகத்தின் எல்லைகளை தாண்டியவனே!! மக்களின் முதல்வனே!! எங்கள் கலாமே !!மும்முடி தரித்த மன்னரெல்லாம் ஆயுதம் கொண்டுமண்ணை பிடித்தார்கள்.. அதை வெற்றி என்றது வரலாறு.நீயோ நீண்ட உன் முடி கோதி விண்ணை பிடித்தாய்சரித்திரமாய் ஆனாய்!! ஓய்வு அறியாமல் உழைத்தவனே!! எங்கள் கலாமே! ஆண்டவன் உன்னை அழைத்து கொண்டது உனக்கு ஓய்வு வேண்டுமென்பதற்கே!!நல்ல கருத்துக்களை மக்கள் மனதில் விதைத்தவனே!! மீண்டும் முளைத்து வருவாய் விருச்சமாய்எங்களுக்கு நிழல் தர !! காலம் உள்ளவரை கலாமே!! உன் புகழ் பாடும் விண்ணுலகமும் இந்த மண்ணுலகமும் ..


No comments:

Post a Comment