எங்கள் அண்ணா!! எங்களை விட்டு எங்கு சென்றாய்?? வயது பார்க்காமல் எல்லோரிடமும்
அன்பை சொரிந்தாய் மலர்ச்சென்டாய்!!
அதனால் தானோ மலரை சுற்றும் வண்டாய்
உன்னையே சுற்றி வந்த எம்மை அரவணைத்து கொண்டாய் ...
வாஞ்சையாய் நாங்களும் நீ பார்க்க குண்டாய்
இருந்தமையால்
உன்னை குண்டுமைதீன்
என்றோம்.
சிரித்துகொண்டே
ஏற்றுகொண்டாய்!!
எங்களை சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தவனே!!
வாழ்க்கையே உனக்கு ஒரு விளையாட்டு தான்...
அதனை விளையாட்டாய் ரசித்தாய்!!
அணு அணுவாய் ருசித்தாய்!!சிறந்த ரசிகன்
நீ !
வாழ்க்கை வாழ்வதற்கே பிறரை பார்த்து
ஏங்குவதற்கு அல்ல
என்ற சிந்தனையை
நகை சுவையாய் சொல்லி தந்தவன்
நீ !!
நல்லவனே, விளையாட்டிலும் வல்லவன் நீயே!!
கூத்தாநல்லூரில் கிரிக்கெட் வளர காரணமும் நீயே..
எழுபதுகளின் இறுதியில் வந்த புயலில்
சிதறிய உயர்நிலை
பள்ளியின் ஓடுகளை
அள்ளி கிரிக்கெட்
விளையாட களம் படைத்தாய்
தெருக்களில் கிட்டி புள்ளு ஆடிய
எங்களுக்கு
கிரிக்கெட் விளையாட சொல்லி பலம் கொடுத்தாய்!
பல சமயம் கிரிக்கெட் போட்டிகள்
நடக்கும்,
மதிய உணவாய் தயிர் சாதங்களை கொடுக்கலாம் என்பர் பலர்,
அந்த வாதங்களை புறந்தள்ளி,
வங்கியில் பணம் இல்லையென்றாலும்
உன் புன்னகை மங்கிவிடாமல் பொன்னகையை விற்று
அறுசுவையாய் உணவு சமைப்பாய்!!
உன் அன்பால் உன்பால் எங்களை ஈர்த்தவனே!!
நீ எங்களை விட்டு பிரிந்தாலும்
உன் நினைவுகள் எப்போதும் எங்களுடன் இருக்கு........
No comments:
Post a Comment