பட்டேல் காட்டிய வீரத்தில்,
சமஸ்தானங்கள் இணைந்தன..
இந்தியா மலர்ந்தது,விரிந்தது..
நர்மதை நதி தீரத்தில்,அதை
போற்றி,இரும்பு மனிதருக்கு,
வானுயர் இரும்புச்சிலை..
இந்தியனாய் போற்றுகிறோம்,
மனதார வாழ்த்துகிறோம்..
தென்கோடி குமரியில்
சீறிடும் கடலலை நடுவில்
தமிழாசான் நிற்கின்றான்..
மனித குலம் நிமிர்ந்திட
பொது மறை தந்தவன்,
சுனாமியை வென்றவன்
கால் கடுக்க நிற்கின்றான்..
சிலருக்கு சிலையின் உயரத்தால்
பெருமை, எங்களுக்கோ உன்னால்,
உன் குறளால்,தமிழால்,பெருமை..
No comments:
Post a Comment