Tuesday, 1 August 2017

கலாமின் கையில் வீணை


ஏவுகணையால் அன்று   
விண்ணை அளந்தவன் 
கையில் இன்று வீணை...
சங்கீத வித்வானா அவர்?? 
நல்ல வினோதம் ஐயா !!

இனி பிஸ்மில்லாஹ் கான் 
கையில் வேலும்,அம்ஜத் 
அலி கான் கையில் வாளும்
கொடுப்பீர்களோ??

அமைதி பூங்காவாம் 
தமிழகத்தில் காலூண்ட, 
பிள்ளையார் சுழி 
போடப்பட்டு விட்டது  
ராமேஸ்வரத்தில்..

கலாமின் கையில் வீணை 
பகவத் கீதையோ பீடத்தில்..
முஸ்லீம்கள் வெகுண்டு 
எழுவார்கள், அறுவடை 
செய்யலாம் என காத்திருந்த 
காவிகளுக்கு ஏமாற்றம்..

மதங்களின் உரசலில் 
நீங்கள் நடத்திடும் 
அரசியலை மக்கள் 
நன்றாக அறிவர் .

நாங்கள் எதிர்ப்பது 
கீதையை இல்லையே..
உங்களின் பாதையை.. 
தலைக்கேறிய உங்களின் 
அதிகார போதையை..

துறவறத்தை ஏற்றவன் 
கலவரத்தை போதித்து 
அரசு கட்டிலில் ஏறிய
உத்திர பிரதேசம் அல்ல 
இந்த தமிழ் மண் !!

கலவரத்தால்,தென் 
கோடி தமிழகத்தை 
'உதிர' பிரதேசமாய் 
ஆக்க நினைக்கும் 
உங்கள் கனவு 
என்றுமே பலிக்காது!!

சாதி மத பேதங்கள் 
இன்றி,சமத்துவமாய்
உறவாடும் நேசமிகு  
மக்களை கொண்ட 
தமிழகத்தில்,தாமரை 
என்றுமே மலராது!!!


No comments:

Post a Comment